நடிகை நயன்தாரா, வாணிபோஜனுடன் நடிக்க மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா, கடந்த 2005 ஆம் வருடத்தில் வெளியான, ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, வல்லவன், வில்லு, ஏகன், கஜினி, பில்லா உட்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நயன்தாரா நடித்து விட்டார். தற்போது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார். எனினும் முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
இந்நிலையில், ஒரு இயக்குனர் புதிய படத்திற்காக நயன்தாராவை அணுகி, உங்களுக்கு சகோதரி கதாபாத்திரத்தில் நடிகை வாணி போஜனை நடிக்க வைக்கலாமா? என்று கேட்டிருக்கிறார். இதைக்கேட்டவுடன் கோபமடைந்த நயன்தாரா, அதெல்லாம் வேண்டாம், வேறு யாரையாவது நடிக்க வைங்க என்று கூறிவிட்டாராம்.
ஆனால் அந்த இயக்குனர் விடாமல் கட்டாயப்படுத்தியிருக்கிறார். இதனால், கடும் கோபமடைந்த நயன்தாரா, “அப்போ இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டாராம்.