Categories
அரசியல்

“ஒருவேளை சீட்டு கிழிந்து விடுமோ”?….. பயத்தில் நம்ம அமைச்சர்…. அப்செட்டில் முதல்வர்….!!!!

பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்பட்ட சம்பவத்தால் உணவு துறை அமைச்சரின் பதவி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த பரிசு தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் அதிமுக அரசின் மீதும் முதல்வர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் உணவு மற்றும் நுகர்வோர் துறை உயரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “எந்த வகையிலும் மக்களுக்கு தரமற்ற பொருட்கள் வழங்கப்படக்கூடாது மற்றும் அரசின் நற்பெயருக்கு இன்னல் விளைவிக்கும் விதமாக எந்த காரியமும் நடந்து விடக்கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் அந்த நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக மிகவும் அப்செட் ஆன முதல்வர் தவறுக்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தன்னுடைய பதவிக்கு ஏதேனும் பங்கம் வந்துவிடுமோ என அமைச்சர் சக்கரபாணி பயத்தில் உள்ளாராம். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக தமிழக மக்களுக்கு அதிமுக அரசு மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் ஆங்காங்கே பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் கொடுக்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு தொகுப்பு பல கோடிகள் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தார் அதற்கு முதல்வர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |