செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கொரோனா இரண்டாம் அலை இருந்த போது, நிறைய இடங்களில் பார்த்திருப்பீர்கள்…. கர்நாடகாவில் ஒருநாள்கூட கடைகள் மதுக்கடை மூடப்படவில்லை, பாண்டிச்சேரியில் அதே மாதிரி மூடப்படவில்லை. தமிழகத்தில் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூடுகின்ற போது கர்நாடகா பாண்டிச்சேரி போன்ற பகுதியில் இருந்து சட்டவிரோதமாக சில தவறுகள் நடைபெறுகின்றன.
அதற்காக நான் நியாயப்படுத்தவில்லை. மருத்துவ வல்லுநர்களிடம் அரசின் சார்பில் முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அவர்களுக்கு ஆலோசனை கூட்டங்களை நடத்தி அதன் அடிப்படையில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் வழங்கி வருகிறார்கள்.
அவர்கள் கொடுக்கும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு ஏற்ப அரசு நிர்வாகம் செயல்படும் என தெரிவித்தார். பின்னர், அரசு மதுபானக்கடை பார்களில் அவர்களுக்கு ஏன் இலவசமாக தன் கிளாஸும் வாட்டர் பாட்டிலும் கொடுக்கக்கூடாது என பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி ஆச்சரியப்பட்டு புன்சிரிப்போடு கும்பிட்டுவிட்டு கடந்தார்.