பிரியாணி கடையின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பிரியாணி கடையில் சில தினங்களுக்கு முன்பாக கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் ஹார்டு டிஸ்க் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இது பற்றி கடை உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் வசிக்கும் முரளி என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.