தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நிலுவையில் இருந்து வந்த மூன்று அகவிலைப்படி பாக்கி தொகையினை வழங்குமாறு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும் தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதையும் 58-லிருந்து 61-ஆக அதிகரித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் இருந்த அகவிலைப்படி பாக்கி தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதும் உயர்த்தப்பட்டுள்ளதால் ஊழியர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் இந்த நடவடிக்கைக்காக முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.