தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகன காஜல் அகர்வால், பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் 2008-ம் ஆண்டு பொம்மலாட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானாவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உட்பட அனைத்து முன்னணி நாடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பிரபலமாக உள்ளார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய சீக்கிரம் திரைக்கு வர உள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், குடும்ப உறுப்பினர்களுடன் மாலத்தீவு சென்றிருக்கும் காஜல், அங்கு எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், அவர் பிகினி உடையில் இருக்கின்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கலானது தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் விரைவில் கல்யாணம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.