சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவை நேரில் காண பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் குரோ நா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ஆளுநர் தேசியக்கொடியை காலை 8 மணிக்கு ஏற்றி வைக்க உள்ளார். ஒவ்வொரு வருடமும் இதனை காண சுதந்திரப் போராட்ட தியாகிகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என பலர் அங்கு வருவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
மேலும் சுதந்திர போராட்ட வீரர்களும் வயது மூப்பு காரணமாக வைரஸ் தாகத்தால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக குடியரசு தினத்தன்று அவர்களின் வீடுகளுக்கு சென்று அதிகாரிகள் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவிப்பார்கள். எனவே பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் யாரும் சுதந்திர தின விழாவை காண நேரில் வர வேண்டாம் என்றும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் சுதந்திர தின விழா நேரடி ஒளிபரப்பு ஆகும் அதனை வீட்டில் இருந்தே கண்டுகளிக்குமாறும் தமிழக அரசு கூறியுள்ளது.