பாகிஸ்தானில் உள்ள எதிர்கட்சிகளை மிரட்டும் வகையில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி ஆட்சி செய்து வருகிறது. பிரதமராக அக்கட்சியின் தலைவர் இம்ரான்கான் இருந்து வருகிறார். பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டங்களும் பேரணியை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பிரதமர் இம்ரான்கான், எதிர்க்கட்சிகள் அரசை கவிழ்க்க முயற்சி செய்தால் கடும் எதிர்வினைகளை சந்திப்பார்கள்.
என்னை அவர்கள் பதவி விலக சொன்னால் நான் ஆபத்தானவனாக மாற நேரிடும். நான் தெருவில் இறங்கினால் எதிர்க்கட்சி ஒளிந்து கொள்வதற்கு கூட இடம் கிடைக்காது என்று எச்சரித்துள்ளார். மேலும் பேசிய அவர் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனை என்னை என்னைத் தூங்கவிடவில்லை. பாகிஸ்தானில் கடுமையாக விலை ஏற்றம் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலையேற்றம் விலை ஏறி உள்ளது. இது உலகளாவிய பிரச்சினை, இத்தகைய சவால்களை நாம் எதிர் கொள்கின்றோம்.
அமெரிக்கா கொரோனாவில் இருந்து மக்களை காக்க 6 லட்சம் கோடி டாலர்களை செலவு செய்து வரும் நிலையில் நாம் 800 கோடி டாலர்களை மட்டும் செலவு செய்திருக்கிறோம். இதையெல்லாம் ஒப்பிட்டுப் பேச வேண்டும். நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாட்டில் கடும் பண பற்றாக்குறை நிலவியது என்று விளக்கம் அளித்து பேசிய அவர், இந்த அரசாங்கம் முழுமையாக பதவியை நிறைவு செய்யும். வரக்கூடிய தேர்தலில் நிச்சயம் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் எனவும் பேசினார்.