தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 மற்றும் 14 வயதுடைய 3 சிறுவர்கள் 8ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் ஆன்லைன் வகுப்புக்காக வாங்கிக்கொடுத்த செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவர்கள் இருந்த வீட்டின் அருகே வசித்து வந்த 8 வயது சிறுவன் ஒருவனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மேற்கண்ட சிறுவர்களை பார்த்ததும் அவன் பயத்தில் அலறி கொண்டு மயக்கம் அடைந்தான். இதையடுத்து 9 வயது சிறுவனின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன்பிறகு சிறுவனிடம் விசாரித்த போது தனது வீட்டருகே வசித்து வந்த 3 மாணவர்கள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக தன்னை பாலியல் ரீதியாக வற்புறுத்தியதாக அதிர்ச்சி தகவலை சிறுவன் கூறியுள்ளார். ஆபாச படம் பார்த்த மூவரும் சிறுவனை தனியே அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி இயற்கைக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அதனால் உடல் மற்றும் மன உளைச்சல் தாங்க முடியாமல் சிறுவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரியவந்ததை அடுத்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து புகாரின் பேரில் சிறுவர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.