தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் மிகவும் முக்கியமான காமெடி நடிகர்களில் ஒருவர் குண்டு கல்யாணம். இவர் மழலைப் பட்டாளம் என்ற படத்தில் அறிமுகமானவர். இவர் நீண்ட காலம் திரையுலகை விட்டு விலகி இருந்த நிலையில் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியலில் குண்டு கல்யாணம் நடிக்க இருப்பதாக அந்த சீரியலின் கதாநாயகனான செந்தில் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் . இதனால் சின்னத்திரை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.