தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது.
அதனால் பயனர்களின் தேவைக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி கணினியில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் முறையை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளது. முதலில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு ஏற்ற 6 இலக்க பாஸ்வேர்டை பதிவிட வேண்டும். ஒருவேளை நீங்கள் பாஸ்வேர்ட்டை மறந்து விட்டால் முதலில் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு ரீசெட் செய்யும் லிங்க் வரும். விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.