Categories
உலக செய்திகள்

அதிரடி: “ஐக்கிய அரபுவா” கொக்கா…! நடுவானில் இடைமறித்த ராணுவம்…. கிளர்ச்சியாளர்கள் மீண்டும் துணிகரம்… வெளியான பரபரப்பு அறிக்கை….!!

ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 17 ஆம் தேதி நடத்திய ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து மீண்டும் தற்போது 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஏமன் நாட்டின் அதிபரான மன்சூரின் ஆதரவைப் பெற்ற ஹாதி கிளர்ச்சியாளர்களுக்கும், ஈரான் நாட்டின் ஆதரவுடைய ஹவுதி படையினருக்குமிடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடந்து வருகிறது.

இதில் ஹாதி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் உதவி செய்து வருகிறது. இதனால் கடுப்பான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவுதி அரேபியாவின் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளது.

ஆனால் கடந்த 17ஆம் தேதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது 2 ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதனால் 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் நேற்று மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளார்கள்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவ வீரர்கள் அந்த ஏவுகணைகளை நடுவானில் வைத்தே இடைமறித்து அழித்துள்ளார்கள். இந்த தகவலை ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவ அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

Categories

Tech |