Categories
சினிமா

என் மகளின் 2வது திருமணமும்…. நாசமா போச்சு…. மனவேதனையில் துடிக்கும் சூப்பர் ஸ்டார்….!!!

தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தனது கணவன் கல்யாண் தேவை பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீஜா கல்யாணம் தேவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்வதை நிறுத்தினார். அதோடு சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கல்யாண் என்ற பெயரை நீக்கினார். இதனால் இவர்கள் இருவரும் பிரிய போவதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ வெளியீடு வரவில்லை.

இந்நிலையில் கல்யாண் தேவ் ஸ்ரீஜாவின் குடும்பத்தினரை பின்தொடர்வதை நிறுத்தவில்லை. ஸ்ரீஜாக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்த பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு கல்யாண் தேவை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மகளின் இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிய உள்ளது எண்ணி சிரஞ்சீவி மனவருத்தத்தில் உள்ளதாக அவரது நட்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

Categories

Tech |