Categories
மாநில செய்திகள்

‘Post office’யில் பெண் குழந்தைகளுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்…. முழு விபரம் இதோ….!!

இந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர்கள் பணத்தை சேமிக்க விரும்புகின்றனர். அதற்கு ஒரு எளிய வழி post officeல் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தை 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் தொடங்கி வருடத்திற்கு 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களும் கணக்கு தொடங்கி பயன் பெறலாம். இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை எடுத்து செல்லவும்.

இந்த திட்டத்தில் சேமிக்கும் தொகைக்கு ஆண்டு ஒன்றிற்கு 7.6% வட்டி கொடுக்கப்படுகிறது. மேலும் இதில் தான் மற்ற திட்டங்களை விட அதிக வட்டி தொகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு தொகையை பெண் குழந்தையின் மேல் படிப்பு, திருமணத்தின் போது அல்லது 21 வயது முடிந்தவுடன் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் இந்த திட்டத்தின் முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கு உண்டு. அந்த வகையில் மாதம் ஒருவர் ரூ.1000 சேமித்து வந்தால் முதிர்வு தொகையாக ரூ.5.09 லட்சம் வரை பெறலாம். இந்த திட்டத்தை தொடங்க ஆன்லைனிலும் வசதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |