பிரதம மந்திரியின் இலவச சிலிண்டர் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விபரம் கீழேயே கொடுக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள ஏழை பெண்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் பெறுவதற்கு என்ன வழி முறைகள் என இந்த பதிவில் பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் பெண்கள் மட்டுமே பயன் பெறலாம். பயனாளிகள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும். தவிர வேறு ஏதேனும் சிலிண்டர் இணைப்பு இருந்தால் பிரதம மந்திரியின் இலவச சிலிண்டர் வழங்கப்படாது. அதன்படி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என பதிவு செய்யப்பட்ட குடும்ப அட்டை, ஆதார் கார்டு மற்றும் வங்கியின் ஐஎஃப்சி கோடு இவை அனைத்தும் தேவை.
முதலில் உஜ்வாலா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று https://www.pmuy.gov.in/en/ என்பதில் செல்ல வேண்டும். பின்னர் உங்களுக்கான விபரங்கள் அனைத்தையும் அதில் சமர்ப்பித்து எந்த சிலிண்டர் இணைப்பு பெற விரும்புகிறீர்கள் என்பதையும் அதில் கூறவேண்டும். பின்னர் பூர்த்தி செய்து ஆன்லைனில் அனுப்பி வைக்கவேண்டும்.