Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கூட்டமாக சுற்றும் நாய்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. ராணிபேட்டையில் பரபரப்பு….!!

கூட்டமாக சுற்றி திரிகின்ற நாய்களால் வேலைக்கு சென்று வரும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெடும் புலி கிராமத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், நூலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் போன்றவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் இருக்கும் இளைஞர்கள் பலர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இதனை அடுத்து இவர்கள் வேலை முடித்து விட்டு இரவில் வீடு திரும்பும் போது தெருநாய்கள் கும்பலாக ரோட்டில் அங்குமிங்கும் ஓடி விபத்து ஏற்படுத்துகின்றது.

பின்னர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்ற நிலையில் அவர்களைப் பார்த்து நாய்கள் குலைப்பதால் ஒருவித அச்சத்துடனேயே வந்து போகின்றனர். இதனை தொடர்ந்து தெரு நாய்களுக்கு உடல் முழுவதும் தோல் நோய் ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் உடனடியாக நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |