கார் திடீரென நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது.
புதுச்சேரியில் சக்தி சாய்ராம், ஜோதிஸ்வரன், திவாகர், பால் சுந்தர் மற்றும் ராகவேந்திரன் ஆகிய 5 பேரும் வசித்து வருகின்றனர். இவர்கள் 5 பேரும் காரில் புதுவையிலிருந்து பெரம்பலூருக்கு சென்றுள்ளனர். இதில் காரை பால் சுந்தர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் சேடபாளையம் எஸ்.எம் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனம் மற்றும் ஒரு பெண் மீது மோதி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது.
இதனையடுத்து கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த செம்மலை மற்றும் கோவிந்தராஜ் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர். பின்னர் அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.