Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு…”அளவான மூலதனமே போதுமானது”… உறவினர் வகையில் பணச்செலவு….!!

ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று நேர்மையான செயல்களால் அதிக நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது. உறவினர் வகையில் பணம் செலவு செய்ய நேரிடும். சத்து மிகுந்த உணவு உண்பதால் ஆரோக்கியம் மேம்படும். இன்று மாணவர்கள் திட்டமிட்டு பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். எதிலும் அவசரப்படாமல் நிதானத்தை மட்டும் கடைப்பிடிப்பது நல்லது.

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நீங்கள் அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். உங்களுடைய அறிவு திறமை இன்று கூடும். சில முக்கிய முடிவுகளை எடுப்பதன் மூலம், நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் இருக்கும். பேசும் பொழுது கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். இன்று தனவரவு கிடைப்பதில் கொஞ்சம் தாமதப்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |