Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தமிழக படகுகள் ஏலம்…. இலங்கை அரசு அறிவிப்பு…. அதிர்ச்சியில் உறைந்த மீனவர்கள்….!!

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக படகுகளை ஏலம் விடப்போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது, எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து யாழ்ப்பாணம், காரைநகர், காங்கேசன்துறை, தலைமன்னார் போன்ற பல்வேறு இடங்களிலும் நிறுத்தி வைத்துள்ளனர்.

அதன்படி கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் இலங்கை கடற்படையினரால் 100-க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து ஏலத்தில் 105 படகுகள் ஏலம் விடப்படும் என தெரிவித்துள்ள நிலையில் வருகின்ற பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஏலம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் பேசுகையில், தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுகின்ற இலங்கை அரசின் இந்த செயலுக்கு மீனவர்கள் சார்பில் கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் தமிழக படகுகளை மீட்டு தரக்கோரி பல்வேறு முறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் இதுவரையிலும் கண்டுகொள்ளப்படவில்லை. எனவே இலங்கையிலுள்ள தமிழக படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |