Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!வெளியானது தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள்…!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகள் திறக்கப்பட்ட ஒரு சில மாதங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளன. அதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பிஇ, பிடெக், பி. ஆர்க்.. கிற்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. பிப்ரவரி 1 முதல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் ஏற்கனவே அறிவித்த நிலையில் பாட வாரியாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணா பல்கலைகழக தேர்வு வழிகாட்டு நெறிமுறை வெளியாகியுள்ளது. அரியர் எழுதும் மாணவர்கள் இறுதியாக பயின்ற கல்லூரிகளை தொடர்பு கொண்டு தேர்வு அனுமதிச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். கூகுள் கிளாஸ் ரூம் அல்லது மின்னஞ்சல் வழியாக தேர்வு வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும். எனவும் மாணவர்கள் எழுதிய விடைத்தாளை அஞ்சல் அல்லது கொரியர் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |