விக்ரம் பிரபுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் ”கும்கி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதனையடுத்து, சிகரம் தொடு, துப்பாக்கி முனை, அரிமா நம்பி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ”பொன்னியின் செல்வன்” படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அந்த வகையில், விக்ரம் பிரபுவின் சொத்து மதிப்பு குறித்த தகவலும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இவரின் முழு சொத்து மதிப்பு மட்டும் சுமார் 30 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.