Categories
அரசியல்

“தமிழக செலவில் கொண்டுவரப்பட்ட வாலிபர் உடல்”…. நிறைவேற்றப்பட்ட ஓபிஎஸ் கோரிக்கை….!!!

பிலிப்பைன்சில் உயிரிழந்த தமிழக மாணவர் சஷ்டி குமாரின் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டு வரப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்கபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாலசேகரன் இவரது மகன் சஷ்டி குமார். இவர் பிலிப்பைன்சில் உள்ள ஏ எம் ஏ கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருவியில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ பன்னீர்செல்வம் மாணவன் சஷ்டி குமாரின் உடலை அரசு செலவில் தமிழகம் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், உயிரிழந்த சஷ்டிகுமாரின் உடலைத் சொந்த ஊருக்கு கொண்டு வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசின் அயலகத் தமிழர் நல ஆணையரகத்தின் மூலம், வெளியுறவுத்துறை மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவன் சஷ்டி குமாரின் உடல் இன்று அதிகாலை 2.15 மணியளவில் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் மாணவனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு சார்பில் 4 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவன் சஷ்டி குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். “எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Categories

Tech |