Categories
சினிமா

தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்… வெளியானது அடுத்தப் படத்தின் அப்டேட்…!!

இயக்குனர் c.s அமுதன் தான் இயக்கும் ரத்தம் திரைப்படம் தமிழ் திரையுலகில் புதிய முயற்சியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இயக்குனர் சி.எஸ் அமுதன் தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களத்துடன் கடந்த 2010 ஆம் வருடத்தில், வெளியான தமிழ்ப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் சிவா கதாநாயகனாக நடித்திருந்தார். வழக்கமாக அனைத்து திரைப்படங்களில் வரும் காட்சிகளை நகைச்சுவை கலந்து வித்தியாசமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2018-ஆம் வருடத்தில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து, வெற்றி பெற்றது. இந்நிலையில், சி.எஸ் அமுதன், விஜய் ஆண்டனியை வைத்து ரத்தம் என்னும் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகியிருக்கிறது. இது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |