உலக சுகாதார மையம், மார்ச் மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு முடிவுக்கு வர உள்ளது என்று கூறியிருக்கிறது.
உலக நாடுகள், கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், உலக சுகாதார மையம் நம்பிக்கையான தகவலை ஆய்வு மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறது. அதாவது, ஆய்வின் படி, ஐரோப்பிய நாடுகளில் வரும் மார்ச் மாதத்திற்குள் 60% பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இதனால், தொற்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி உலக சுகாதார மையத்தின் ஐரோப்பிய பிரிவிற்கான இயக்குனர் ஹான்ஸ் குலுகே, மார்ச் மாதத்திற்கு பின் கொரோனா பரவாது என்று கூறியிருக்கிறார். மார்ச் மாதத்தை தொடர்ந்து ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பின் உலகின் பிற பகுதிகளிலும் கொரோனா பரவி, மறையத் தொடங்கும் என்று கூறியிருக்கிறார்.