Categories
சினிமா தமிழ் சினிமா

தோல்வி பயத்தில் வெளிவந்த 6 படங்கள்?…. இப்போ செம ஹிட்!…. எந்தெந்த படம்னு பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் வெளியாகும் சில படங்கள் சில மாதங்கள் அல்லது வருடங்களுக்கு பிறகே ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும். அந்த வகையில் ஆரம்பத்தில் ப்ளாப் ஆகி பின்னர் மக்களே கொண்டாடிய படங்கள் பற்றி பார்க்கலாம்.

சேது:-

விக்ரம், அபிதா நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’ திரைப்படத்துக்கு தொடக்கத்தில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்த படத்தை சிறிது காலம் கழித்து ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர்.

அன்பே சிவம் :-

கமல்ஹாசன், மாதவன் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான “அன்பே சிவம்” திரைப்படத்தின் கதை ஆரம்பத்தில் யாருக்குமே புரியவில்லை. ஆனால் “முன் பின் தெரியாத ஒரு மனுஷனுக்காக கண்ணீர் விடுற அந்த மனசு இருக்கே அதான் கடவுள்” என்ற வசனமானது இன்றளவும் மக்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

பயணம் :-

த்ரில்லர் திரைப்படமான “பயணம்” ஆரம்பத்தில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. ஆனால் அதன் பிறகு இந்த படத்தில் எடுக்கப்பட்டிருந்த இரண்டு மணி நேர விமான பயணமானது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆரண்ய காண்டம் :-

“ஆரண்ய காண்டம்” திரைப்படம் ஆறு பேர் ஒருவரை கொல்ல முயற்சி செய்யும் ஒரு நாள் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படமும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. சில காலங்களுக்கு பிறகே மக்களால் கொண்டாடப்பட்டு வந்தது.

தெகிடி:-

ஜனனி ஐயர் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான “தெகிடி” திரைப்படம் வித்தியாசமான கதையாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படம் ஆரம்பத்தில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகே ரசிகர்களை கவர்ந்தது.

பண்ணையாரும் பத்மினியும் :-

“பண்ணையாரும் பத்மினியும்” என்ற திரைப்படம் அருண் குமார் இயக்கத்தில் வெளியானது. மேலும் இந்த கதை அருமையான கதை களத்தில் எடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த படம் சில நாட்களுக்கு பிறகே ரசிகர்களை கவர்ந்தது.

Categories

Tech |