நாகை மாவட்டம் சீர்காழி அருகே தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் உரிய ஆவணம் இன்றி சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 200 டன் வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திட்டை கிராமத்தில் வட்டாட்சியர் பெயர் மற்றும் காவல்துறை அடங்கிய பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சரக்கு வாகனத்தில் இருவருடன் வெங்காயம் ஏற்றிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் இருந்து ஏற்பட்டு வருவதாக ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். இந்நிலையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டதால் சரக்கு வாகனத்தை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஓட்டுனர் மற்றும் கிளீனர் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்தல் காலங்களில் பணத்திற்கு பதிலாக வெங்காயம் ஓட்டிருக்கு வழங்கப்படுகிறதோ என்ற சந்தேகமும் காவல்துறை மத்தியில் எழுந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.