Categories
அரசியல்

“முதல்வர் சொந்த மாவட்டத்துல இந்த நிலைமையா?”…. தொடரும் அவலம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

முதல்வரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மேட்டாங்குளம் கிராமத்தில் மக்கள் மோசமான நிலையில் வசித்து வருகின்றனர். அதாவது அங்குள்ள கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்லவும், கிராமத்திற்குள் நுழையவும் கோரையாற்றின் மேல்கரை பகுதியில் அமைந்துள்ள ஒத்தையடி ஆபத்தான பாதையை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது.

அதேபோல் இந்த ஒத்தையடி பாதையின் இருபுறமும் முட்புதர்களும், முள் மரங்களும், செடி கொடிகளும் அமைந்துள்ளதால் அங்குள்ள மக்கள் ஏதோ காட்டுப்பகுதிக்குள் செல்வது போல் உணர்கின்றனர். மேலும் அந்த கிராமத்தில் ஒரு பெட்டிக்கடை கூட கிடையாது என்று கூறப்படுகிறது. எனவே தீப்பெட்டி வாங்க வேண்டுமென்றால் கூட அந்த ஆபத்தான ஒற்றையடி பாதையை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது.

அதேபோல் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள் 3 கிலோமீட்டர் தொலைவை கடந்து தான் செல்ல வேண்டியிருக்கிறது. முதியோர்கள், ஊனமுற்றவர்கள், உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்ல வேண்டுமானால் கட்டிலில் அவர்களை படுக்க வைத்து தேவதானம் கிராமத்திற்கு தூக்கி செல்ல வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |