Categories
சினிமா

ஐயோ…! கொரோனா தொற்று இவரையும் விட்டு வைக்கவில்லையா…? அதிர்ச்சியில் திரையுலகம்…!!

இயக்குனரும் நடிகருமான செல்வராகவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலிக்கு சில நாட்களுக்கு முன்பு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகருமான செல்வராகவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தன்னுடைய பதிவில் கூறியிருப்பதாவது, “எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று காலை தெரியவந்தது.

என்னுடன் கடந்த 3 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் மாஸ்க் அணிந்து வெளியே செல்லுங்கள்…!!” இவ்வாறு அவர் தனது பதிவில் கூறியுள்ளார் செல்வராகவனின் ட்வீட்டை பார்த்த பலரும் விரைவில் குணமடைந்து வர இறைவனை பிரார்த்திப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.

Categories

Tech |