கொலராடோவில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நாக்கில் முடி வளரும் சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொலராடோவில் 42 வயதாகும் கேமரூன் என்ற இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் செதில் செல் கார்சினோமா என்னும் நாக்குடன் தொடர்புடைய புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இவருடைய கால் திசுக்களின் மூலம் மருத்துவர்கள் கேமரூனின் நாக்கில் உருவான புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் கேமரூனுக்கு மருத்துவர்கள் புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக பயன்படுத்திய கால் திசுக்களினால் அவரது நாக்கில் முடி வளருகிறது. இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.