Categories
தேனி மாவட்ட செய்திகள்

வழக்குபதிவு மட்டும் போதாது…. குண்டரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்…. பாஜகவினர் ஆர்ப்பாட்டம்….!!

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியை தாக்கியவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி பாஜகாவினர் மற்றும் இந்து இயக்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் பங்களாமேட்டில் பாஜகவினர் மற்றும் அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ரவிக்குமாரை தாக்கியவர்களில் இதுவரை காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். எனவே வழக்குபதிவு செய்த 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பாஜக மாநில பொதுசெயலாளர் சீனிவாசன், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் முருகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ராஜபாண்டியன், ஆர்.எஸ்.எஸ் மாவட்ட பொறுப்பாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் உட்பட நிர்வாகிகள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Categories

Tech |