Categories
டெக்னாலஜி

88,000 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்…..!!

ட்விட்டரின் கொள்கைகளை மீறியதாகக் கூறி சுமார் 88 ஆயிரம் கணக்குகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் வகையில் செயல்பட்டு, ட்விட்டர் நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதால், 88 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

எனினும் முடக்கப்பட்ட கணக்குகளின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில், 6 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் குறித்த தகவல்கள் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த 88 ஆயிரம் ட்விட்டர் கணக்குகளும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஸ்மாட் (Smaat) என்ற நிறுவனத்தால் இயக்கப்பட்டதாக தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளிலிருந்து பதிவிட்ட ட்வீட்கள் பெரும்பாலும் அரபி மொழியில் இருந்ததாகவும் அரசுக்கு ஆதரவான கருத்துகள் அந்த கணக்குகளிலிருந்து திட்டமிட்டு பரப்பப்பட்டதாகவும் ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபியா தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் தரப்படவில்லை

Categories

Tech |