Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் இனி பொருட்கள் வாங்க…. மீண்டும் அமலுக்கு வந்த திட்டம்…..!!!!!

தமிழகத்தில் 2020 அக்டோபமாதத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் அமலுக்கு வந்தது. அப்போது இருந்து ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் கைரேகையை பதிவு செய்து உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கடைகள் அனைத்திற்கும் கைரேகை பதிவுடன் கூடிய விற்பனை முனைய கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கார்டுக்கு உரியவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் வசிக்கும் பிற மாநில கார்டுதாரர்களும் கைரேகையை பதிவு செய்து அரிசி, கோதுமை வாங்கலாம்.

இதேபோன்று பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழக கார்டு தாரர்களும், அம்மாநிலங்களில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கலாம். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு கடந்த 4ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதனை விரைந்து வழங்க கைரேகை பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் பழைய முறையான ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன. இவ்வாறு கைரேகை பதிவு நிறுத்தப்பட்டதால் பிற மாநில கார்டுதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல் மீண்டும் ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வழங்க வேண்டும் என்ற அரசின் பழைய உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. ஆகவே இனிமேல் பொங்கல் பரிசு வாங்காதவர்களுக்கும் கைரேகை பதிவு செய்து தான் வழங்கப்பட இருக்கிறது. கைரேகை பதிவு மீண்டும் அமலுக்கு வந்துள்ளதால் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் இனி வழக்கம்போல் ரேஷன் பொருட்களை வாங்கலாம். இதனிடையில் புதிய ரேஷன் கார்டு கேட்டு உணவு வழங்கல் துறையின் பொது விநியோக திட்ட இணையதளத்தில், பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.

அதில் தகுதியானவர்களுக்கு 2021 நவம்பர் டிசம்பரில் புதிய கார்டு வழங்க அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். அந்த விபரம் விண்ணப்பதாரர்களின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் ஆக அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இதுவரையிலும் அச்சிடப்பட்ட ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக பல நாட்களுக்கு முன்பு எஸ்எம்எஸ் வந்த நிலையிலும் கார்டு இல்லாததால் பொங்கல் பரிசு வாங்க முடியவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அவ்வாறு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால் புதிய ரேஷன் கார்டு வழங்கக்கூடாது.

ஆகவே கார்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு எஸ்எம்எஸ் அனுப்பிய பயனாளிகள், அடுத்த மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அச்சிடப்பட்ட ரேஷன் கார்டை விரைந்து வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி புதிய விண்ணப்பங்களையும் விரைந்து பரிசீலித்து புதிய ரேஷன் கார்டை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு 2.15 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டது. அதன்படி நேற்று மாலை வரையிலும் 2.10 கோடி கார்டுதாரர்களுக்கு பரிசு தொகுப்பு  வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த கார்டு தாரர்களில் 97.44 % ஆகும். எனினும் இன்னும் 5 லட்சம் பேர் வாங்காமல் இருக்கின்றனர். இதனால் இம்மாதம் 31ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க அரசு அவகாசம் வழங்கியுள்ளது.

Categories

Tech |