30 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் இருவரை குற்றவாளியாக அறிவிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கெம்பட்டி காலனியில் வியாபாரியான சீனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1990-ஆம் ஆண்டு தனது ஸ்கூட்டரில் 35 ஆயிரம் ரூபாயை வைத்து பூட்டிவிட்டு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். வேலையில் 2 மர்ம நபர்கள் ஸ்கூட்டரில் இருந்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் சீனியப்பன் அவர்களை தடுக்க முயன்றுள்ளார். அப்போது மர்ம நபர்கள் சீனியப்பனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகேந்திரன், ஆனந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். கடந்த 1992-ஆம் ஆண்டு மகேந்திரனும், ஆனந்தராஜும் ஜாமீனில் வெளியே வந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகினர். சுமார் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரையும் குற்றவாளிகளாக அறிவிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.