Categories
அரசியல்

தமிழிசையை அவதூறாக பேசிய வழக்கு….  நாஞ்சில் சம்பத் வைத்த கோரிக்கை…. நோ சொன்ன கோர்ட்….!!!

தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாகப் பேசியது தொடர்பாக நாஞ்சில் சம்பத் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போதைய அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தமிழிசையை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நாஞ்சில் சம்பத் இந்த வழக்குகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை எனவும், மேலும் பெண் கொடுமை பாதுகாப்புக்கு எதிராக இந்த வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன எனவும், இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு எனவே இதனை ரத்து செய்ய வேண்டுமென நாஞ்சில்சம்பத் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக விசாரித்த நீதிபதி நாஞ்சில் சம்பத் தமிழிசை சௌந்தர்ராஜன் மட்டுமன்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை இவ்வாறு கொச்சையாக விமர்சனம் செய்தது தெரியவந்துள்ளது. எனவே அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, நாஞ்சில் சம்பத் சார்பில் கொடுக்கப்பட்டிருந்த மனுவை ரத்து செய்ய மறுத்து விட்டார். மேலும் இந்த வழக்கை பல்லாவரம் போலீசார் விசாரிக்கலாம் என உத்தரவிட்டார். தமிழிசை சௌந்தர்ராஜன் பாஜகவை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்கு பல்வேறு தொடர் முயற்சிகள் செய்து வந்தார். இதன் வெகுமதியாக தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பாஜக மேலிடம் அவரை அமரவைத்தது தற்போது புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் ஆகவும் சௌந்தர்ராஜன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |