கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் ஜனவரி 17-ஆம் தேதி சமூக வலைதளங்களில் விவாகரத்து பெற போவதாக அறிவித்தனர். ஆனால் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகும் இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் உள்ள தனுஷின் பெயரை நீக்கவில்லை. வழக்கமாக இதுபோல் விவாகரத்து குறித்து அறிவிப்பு வெளியிடும் யாராக இருந்தாலும் கணவர் பெயரை சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கிவிடுவார்கள்.
ஆனால் ஐஸ்வர்யா அவ்வாறு செய்யவில்லை. எனவே தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு செல்ல வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் ஐஸ்வர்யாவையும் தனுஷையும் சேர்த்து வைக்க நண்பர்களும், குடும்பத்தினரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ரஜினியும், “தனுஷூம் என் மகளும் மீண்டும் ஒன்றாக சேர்ந்தால் மட்டும் போதும்” என்கிற மனநிலையில் இருக்கிறாராம். இதனால் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.