செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயணன் திருப்பதி, அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேசத்தில், இந்த தடுப்பூசி குறித்து இதை செலுத்தினால் ஆண்மை போய்விடும் என்று சொன்னார், தமிழகத்தில் இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் இந்த தடுப்பூசியினால் தான் விவேக் இருந்து விட்டாரோ என்ற சந்தேகம் மக்களிடத்திலே எழுகிறது என்று சொல்லி, மக்களை தூண்டிவிட பார்த்தார்.
திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் அவர்கள், அன்றைய எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் இந்த தடுப்பூசி குறித்து பல சந்தேகங்களை எழுப்பினார், கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுடைய வழக்கம் போலவே அரசை நோக்கி குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலே செயல்பட்டு கொண்டிருந்தார்கள், அதையெல்லாம் தாண்டி இன்றைக்கு நாம் மிக சிறப்பான முறையிலே தடுப்பூசி செலுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறோம்.
மக்கள் அச்சத்தைவிட்டு விலகி, இந்த 3-வது அல்லது, 4-வது கொரோனா அலையிலும் கூட அதிக அளவு மருத்துவமனையில் அனுமதிக்கப் படாது வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடிய அளவிற்கு அந்த தடுப்பூசியானது அதனுடைய பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது இந்தியாவினுடைய மிகப்பெரிய சாதனை….
இந்திய விஞ்ஞானிகளின் சாதனை, மருத்துவர்களின் சாதனை, செவிலியர்களுடைய சாதனை, ஊடகவியலாளர்களுடைய ஒத்துழைப்பு, காவல்துறையினரின் ஒத்துழைப்பு, எல்லாவற்றையும் தாண்டி மக்களுடைய பங்களிப்பு, ஒத்துழைப்பு. இந்த மக்களுடைய இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் மக்கள் ஒருங்கிணைந்தால், ஒன்றிணைந்தால் இப்படிப்பட்ட சிறப்பான விஷயத்தை செய்து காண்பிக்க முடியும் என்கின்ற அந்த ஒரு நல்ல விஷயத்தை மக்கள் எடுத்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.