Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி 10பைசா கொடுக்கல….! குடிகார பய மாதிரி பேசுறாரு…! ஸ்டாலினை பாராட்டும் அதிமுக முன்னாள் நிர்வாகி …!!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி புகழேந்தி, பிரபல யூடியூப் சேன்னலில் பேசும் போது, திமுக தலைவர் முக.ஸ்டாலின்  அம்மாவைப் பற்றி, அப்பாவைப்பற்றி, தங்கச்சியை பற்றி, அவர்கள் வீட்டில் இருக்கின்ற குடும்பத்தினரை பற்றி, ஒரு மூன்றாம் தர ஒரு குடிகார பய மாதிரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். அதை பற்றி தற்போது பேசி பிரயோஜனம் இல்லை, அவ்வளவு கேவலமாக பேசினால் எப்படி ?

இன்றைக்கு இந்த நாட்டினுடைய முதலமைச்சர் ஸ்டாலினை பேசி இருக்கின்றார்.  திரு கமலஹாசனை பற்றி பேசியிருக்கிறார். நாளைக்கு யாரை வேணாலும் பேசுவார், அப்படி தானே பேசிக்கொண்டு இருக்கிறார். ஆகவே அதைக் கேட்பதில் தவறு இல்லை கேட்டது நியாயமான ஒன்று,   திராவிட முன்னேற்ற கழகம் இல்லாமல்….  திரு கமலஹாசன் அவர்களை கேட்டது என்பதும் தவறு என்று தான் சொல்கிறேன்.

அப்படி ராஜேந்திரபாலாஜி பேசியது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன், ஆகவே திமுகவை நான் ஆதரிக்கிறேன் என்று சொல்வது… ஒரு கால் நல்லவைகள் நடக்கும் போது ஆதரிப்போம் தவறே  கிடையாது, நல்லவைகளை ஆதரிக்கத்தான் செய்ய வேண்டும். ஆட்சிக்கு வந்தோம், அதே சுகாதாரத்துறை செயலளார் ராதாகிருஷ்ணன் தான் இருக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னாடி அதிமுக ஆட்சி போச்சு. அப்பொழுது கொரோனாவில் இறந்து போன மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு, முன்கள பணியாளர்களுக்கு எல்லாம் பணம் கொடுப்போம் என்று சொல்லி பத்து பைசா கொடுக்கவில்லை பழனிச்சாமி, ஆட்சிக்கு வந்த பின்னர் ஸ்டாலின் கொடுத்திருக்கிறார் அல்லவா, அதை பாராட்டுவோம் திரு ஸ்டாலின் அவர்களை…..

இப்போது தகவல் வருகிறது பொங்கல் பரிசுகளில் கொஞ்சம் வித்தியாசம் வருகிறது, உள்ளே இருக்கின்ற பொருட்கள் எல்லாம் சரியில்லை என்று சொல்கிறார்கள் அது முதல்வர் கவனத்திற்கு கொண்டு போய் தான் ஆக வேண்டும், அதை புகார் சொல்லித்தான் ஆகவேண்டும் சரி இல்லை என்று சொல்லி, இதில் தான் வேற்றுமை இருக்கிறது.எது நல்லதோ அதை பாராட்டுவோம், எது சரி இல்லையோ அதை நாம் புகாராக எடுத்துச் சொல்வோம் என தெரிவித்தார்.

Categories

Tech |