Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருட்டு போன 3 லட்சம்…. கணக்காளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

கார் சர்வீஸ் சென்டரில் பணம் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டி.கே.டி. பேருந்து நிலையம் அருகில் பிரபல கார் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் உள்ளது. அங்கு கார்கள் தினமும் சர்வீஸ் செய்து தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வீஸ் சென்டரில் ரஞ்சித் என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு பணியை முடித்துவிட்டு அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலையில் ரஞ்சித் அலுவலகத்திற்கு வந்த போது பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.3 லட்சத்து 39 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரஞ்சித் வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |