Categories
உலக செய்திகள்

“அடி கொஞ்சம் பலமோ…?” ஸ்டைலா வந்தவருக்கு இந்த நிலைமையா..? வைரலாகும் வீடியோ…!!!

வாகனம் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட விபத்து குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாகனம் நிறுத்தும் இடத்தில், ஏற்பட்ட விபத்து தொடர்பில் வெளியான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையோரத்தில் நான்கு வாகனங்கள் நின்று கொண்டிருக்கிறது. அப்போது அதிவேகத்தில் அந்த சாலையில் மற்றொரு வாகனம் வருகிறது.

அந்த வாகனம், வளைவு பகுதியில் திரும்ப முடியாமல் வந்த வேகத்தில் அங்கு நின்ற வாகனங்கள் மீது மோதிவிட்டது. அதனைத்தொடர்ந்து, வாகனங்கள் மீது ஏறி, இறுதியாக நின்ற வாகனத்திற்கு இடையில் சென்று நின்று விட்டது.

https://twitter.com/NRNarayan3/status/1484517009643692038

இந்த பரபரப்புக்கு நடுவில் அந்த வாகனத்தின் ஓட்டுநர் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி மெதுவாக வெளியில் இறங்குகிறார். வாகனத்தை நன்றாக பார்க்கிங் செய்து விட்டார். ஆனால் வாகனத்திற்கு தான் சேதாரம் சற்று அதிகம்..

Categories

Tech |