Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென சம்பளத்தை உயர்த்திய நெல்சன்…. இதுதான் காரணமா…. வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது சம்பளத்தை திடீரென உயர்த்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து வருபவர் நெல்சன் திலீப்குமார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இதைத் தொடர்ந்து ரஜினி, அஜீத் என பல முன்னணி நடிகர்கள் நெல்சன் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இப்படி பிஸியான இயக்குனராக வலம் வரும் நெல்சன் தனது சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி உள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இதேபோல் டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். அதன்படி அடுத்ததாக அவர் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்காக  30 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே சிவகார்த்திகேயனும், நெல்சனும் தங்களது சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி இருப்பது அனைவரிடத்திலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |