Categories
சினிமா தமிழ் சினிமா

“100 கோடி வசூல் சாதனை”…. எல்லாம் சும்மா…. வெளியான உண்மை நிலவரம்…!!!

மாநாடு திரைப்படம் வசூல் சாதனை படைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் சிம்புவிற்கு மிகப்பெரிய கம்பேக் ஆக தான் இருக்கும் என்றும் பலர் தெரிவித்தனர்.

மேலும் சிம்புவின் படங்களிலேயே இது மிக முக்கியமான படம் என்றும் கூறினர். இந்நிலையில் மாநாடு திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி மாநாடு திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை படைத்ததாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் வரியுடன் சேர்த்து தான் இத்திரைப்படமும் 110 கோடி வசூல் செய்துள்ளது.

30 சதவீத அரசாங்க வரியை கழித்தால் மீதம் 80 கோடி தான் மாநாடு திரைப்படம் வசூல் செய்துள்ளது. இதனால் மாநாடு திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை படைத்த பட்டியலில் இடம் பெறவில்லை. இத்தகவல் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை அளிக்கும் என்பதால் படக்குழுவினர் மாநாடு திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை படைத்ததாக கூறினர். தற்போது இந்த உண்மை நிலைவரம் வெளியாகியுள்ளது.

Categories

Tech |