மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமற்ற பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அதேபோல் பொங்கல் பரிசு தொகுப்பில் புகார்கள் எழ காரணமான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.