நம் நாட்டில் கடந்த சில தினங்களில் ஏராளமானோருக்கு திடீரென்று ஒரு ஈமெயில் வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்த இமெயிலில் 12,500 ரூபாய் பணம் நாம் செலுத்தினால் 4.62 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி தங்களுக்கு வழங்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த இமெயில் பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது, 12,500 ரூபாய்க்கு 4.62 கோடி ரூபாய் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறுவதாக ஒரு ஈமெயில் பொதுமக்களிடையே பரவிவருகிறது. அந்த இமெயில் முற்றிலும் போலியானது. மேலும் எந்த ஒரு தனி நபர் விவரங்களை கேட்டும், ரிசர்வ் வங்கி ஈமெயில் அனுப்புவது இல்லை என்று தெளிவாக தெரிவித்துள்ளது.
இது போன்ற போலி ஈமெயில்கள் உங்களுக்கு வந்தால் யாரும் அந்த இமெயிலுக்கு பதில் அளிக்க வேண்டாம். மேலும் யாரும் தங்களுடைய சொந்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பாஸ்வேர்டு, பின் ஓடிபி போன்ற தகவல்களை பகிர்வது மிகவும் ஆபத்தானது என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.