எரிமலை வெடிப்பால் டோங்கா தீவு நாட்டிற்கு உண்டான நிலை ஐரோப்பாவிற்கும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
டோங்கா தீவிற்கு அருகில் கடலுக்கு அடியில் ஒரு எரிமலை வெடித்து சிதறியதில் அதன் தாக்கம் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகள் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோன்று ஐரோப்பாவின் டைரேனியன் கடலுக்கு அடிப்பகுதியில் ஒரு எரிமலை சீற்றத்துடன் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
Marsili என்று கூறப்படும் இந்த எரிமலை தற்போது உயிர்ப்புடன் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இந்த எரிமலை குறித்து கண்காணிப்பதற்கு தகுந்த கட்டமைப்புகள் இல்லை. எனவே, அதன் தற்போதைய நிலை குறித்த தகவல் உறுதியாக இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.
மேலும், இந்த எரிமலை வெடிக்கும் பட்சத்தில் அதனால் உண்டாகும் சுனாமி அலைகள் 20 மீட்டர் உயரத்திற்கு இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. எனினும் அந்த எரிமலை வெடிக்க வாய்ப்புகள் குறைவுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.