தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 1,600 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. மேலும் இந்த முகாம்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த காலம் கடந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
மக்களே ரெடியா இருங்க…. தமிழகம் முழுவதும் நாளை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!
