Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகருக்கு கொரோனா பாசிடிவ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் திரையுலக பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மலையாள பிரபல நடிகரான துல்கர் சல்மானுக்கு கோவிட் 19 பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே தந்தை மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் துல்கர் சல்மான் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “எனக்கு covid-19 பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது லேசான அறிகுறிகள் தான் உள்ளது. எனவே நான் நலமாக உள்ளேன். தற்போது வீட்டு தனிமையில் இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |