குர்ஷித் கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டிலிருக்கும் சிரியாவிலுள்ள ஹவெரன் ஜெயிலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அங்கிருந்த ஏராளமான கைதிகள் தப்பி சென்றிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு குர்ஷித் கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க நாட்டிற்கு மிகவும் உதவி செய்துள்ளார்கள்.
மேலும் பிடிபட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளை சிறையில் வைத்து குர்ஷித் கிளர்ச்சியாளர்கள் கண்காணித்தும் வந்துள்ளார்கள். இந்நிலையில் சிரியாவின் வடக்கு பகுதியிலுள்ள ஹவெரன் என்னும் ஜெயிலின் முன்பாக ஐ.எஸ் பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
மேலும் அவர்கள் ஜெயிலின் முன்பாக காவலுக்கு நின்றுகொண்டிருந்த குர்ஷித் கிளர்ச்சியாளர்களின் மீது தாக்குதலையும் நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலை பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 100க்கும் மேலான ஐ.எஸ் பயங்கரவாதிகள் தப்பியோடியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.