இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் படுத்த இரண்டே நிமிடத்தில் தூங்குவதற்கு தேவையான எளிய பயிற்சி ஒன்றை கனடாவை சேர்ந்த பிட்னஸ் குரு தெரிவித்துள்ளார்.
கன்னட நாட்டை சேர்ந்த ஜஸ்டின் அகஸ்டின் என்பவர் டிக் டாக், தொலைக்காட்சி போன்றவைகளில் ஃபிட்னஸ் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இவர் அண்மையில் இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நபர்களுக்கு படுத்த 2 நிமிடத்தில் தூங்குவதற்கு ராணுவத்தினர்கள் பயன்படுத்தும் எளிய பயிற்சி ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நபர்கள் தொடர்ந்து 6 வாரங்கள் செய்யும்படியான பயிற்சி ஒன்றை அவர் கூறியுள்ளார். அதன்படி நபரொருவர் மல்லாக்க படுத்துக்கொண்டு மூச்சை ஆழமாக விட்டுக்கொண்டே உடல் முழுவதையும் ரிலாக்ஸ் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த பயிற்சியின் போது உங்கள் உடல் வெதுவெதுப்பாக இருப்பது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி நீங்கள் ஏரியிலுள்ள படகு ஒன்றில் தனியாக இருப்பது போலும், ஒரு இருட்டு அறையில் கட்டப்பட்டிருக்கும் வெல்வெட் துணியில் தூங்குவது போலும் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த பயிற்சியை செய்து கொண்டிருக்கும் போது உங்களது மனதில் ஏதேனும் எண்ணங்கள் தோன்றினால் “எதையும் நினைக்காதே எதையும் நினைக்காதே” என்று 10 நிமிடங்கள் கூறவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.