கடந்த சனிக்கிழமை அன்று பசுபிக் தீவு நாடான டோங்காவில் திடீரென கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியது. இதனால் சுனாமி அலைகள் எழுந்து பேரழிவு உண்டானது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே விமான நிலையத்தில் ஓடு பாதை முழுவதும் சாம்பலால் மூடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அவை அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து விமானம் ஒன்று அந்நாட்டுக்கு நிவாரண பொருள்களை வழங்குவதற்காக டோங்காவில் வந்து தரையிறங்கியுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலிய விமானமும் உதவி பொருள்களுடன் டோங்காவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.