கிரீஸ் நாட்டில் 32 வயது பாகிஸ்தானியர் ஒருவர் 16-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது பாலியல் வன்முறை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தெஸ்பினா பிளேடனக்கி என்ற இளம்பெண் இந்த மோசமான சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆன பிறகும் அவருக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்தும் அந்த அதிர்ச்சியில் இருந்தும் இன்னும் மீளவில்லை.
அதாவது இந்த கொடுமையான சம்பவத்தை செய்த அந்த பாகிஸ்தானியர் தெஸ்பினாவை அடித்து மோசமாக துன்புறுத்தியதோடு அவரை பாலியல் ரீதியாகவும் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார். பிறகு இதேபோல் அந்த பாகிஸ்தானியரால் பாலியல் தாக்குதலுக்கு ஆளான 16-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தில் அந்த பாகிஸ்தானியருக்கு சுமார் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டது.